Page Loader
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி 
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2024
02:22 pm

செய்தி முன்னோட்டம்

ஆளும் திமுக அரசில், வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன். இவர் திடீரென நோய் வாய்ப்பட்டு, கோவையிலுள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மதிவேந்தனை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ததாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மதிவேந்தன் ஒரு மருத்துவர் ஆவர். இவரின் தந்தை, திமுகவின் நாமக்கல் மாவட்ட முன்னோடிகளில் ஒருவர். மதிவேந்தன், திமுகவிலும் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றியவர். ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் அமைச்சர்களில் ஒருவர் மதிவேந்தன். அதோடு, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 பட்டியலின அமைச்சர்களில் மதிவேந்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி