Page Loader
புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 
புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

எழுதியவர் Nivetha P
Dec 15, 2023
04:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பலர் உயிரிழக்க நேர்ந்தது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில், மீண்டும் கேரளாவில் இதன் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதுகுறித்து அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய வகை தொற்று பாதிப்பு காரணமாகவே கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. கடந்த 13ம் தேதி அறிக்கைப்படி, அங்கு ஒரேநாளில் 230 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா 

கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய தமிழக சுகாதாரத்துறை இயக்குனர்

தற்போது 1100 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று(டிச.,14)கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழகத்திலும் நேற்று நடத்திய பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று(டிச.,15)இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதியவகை தொற்று பாதிப்பு ஏற்பட்ட 3 அல்லது 4 நாட்களில் சரியாகிவிடும். அதனால் பொதுமக்கள் இதுகுறித்து பதற்றம் அடைய தேவையில்லை' என்று கூறியுள்ளார். மேலும் இந்த நோய் பரவல் குறித்து கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தொடர்புக்கொண்டு நிலைமையை கேட்டறிந்துள்ளார் என்றும் தெரிகிறது.