ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
செய்தி முன்னோட்டம்
இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
இந்த கூட்டத்தொடரில், 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு வரும் 19-ஆம் தேதி தாக்கல் செய்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தற்போது தமிழக அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் காரணமாக, ஆளுநரின் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது
#NewsUpdate | சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்#SunNews | #TNAssembly https://t.co/ecG4sJ0prT
— Sun News (@sunnewstamil) February 12, 2024