NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்
    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிப்பு

    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் - கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடான முறையில் விதிகளை மீறி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு அண்மையில் எழுந்தது.

    இதனால் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஆவினில் காலி பணியிடங்களை நிரப்பும் பணியை முறைப்படுத்தி, பழைய தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, தற்போது ஆவினில் உள்ள 322 காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

    மிகைஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்குவதற்கான முன்பணமாக ரூ.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    இதற்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டபூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனையடுத்து போக்குவரத்துத்துறை ஆட்சேர்க்கையும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான முன் பணமாக ரூ.97கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்வு விதிமுறைகள் இந்த பணிக்கான தேர்வுகளுக்கும் விதிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆவின், போக்குவரத்து மற்றும் அரசுக்கு கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி தேர்தல்
    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை சென்னை
    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி இந்தியா
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி காவல்துறை

    இந்தியா

    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள் அமெரிக்கா
    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    உயரம் தாண்டுதலில் உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர்! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025