
பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...!
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாகவே பல நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திக்கொண்டே வருகிறது.
அந்த வகையில், அமுல் நிறுவனம் பால் விலையை தற்போது உயர்த்தியுள்ளது.
இதனிடையே, இன்று (பிப்ரவரி 3) முதம் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மீண்டும் உயர்த்தப்படுவதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான பாலுக்கும் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பால் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதன் காரணமாகவே அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், தோல் கழலை நோயால் ஏராளமான மாடுகள் இறந்துவிட்டதாலும் பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இதுவும் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பால் விலை உயர்வு
புதிய பால் விலை விபரம் இங்கே காணலாம்....
அமுல் டாஸா 500 மில்லி - 27 ரூபாய்,
அமுல் டாஸா 1 லிட்டர் - 54 ரூபாய்,
அமுல் டாஸா 2 லிட்டர் - 108 ரூபாய்
அமுல் டாஸா 6 லிட்டர் - 324 ரூபாய்
அமுல் டாஸா 180 மில்லி - 10 ரூபாய்
அமுல் கோல்டு 500 மில்லி - 33 ரூபாய்
அமுல் கோல்டு 1 லிட்டர் - 66 ரூபாய்
அமுல் கோல்டு 6 லிட்டர் - 396 ரூபாய்
அமுல் பசும்பால் 500 மில்லி - 28 ரூபாய்
அமுல் பசும்பால் 1 லிட்டர் - 56 ரூபாய்
அமுல் ஏ2 எருமை பால் 500 மில்லி - 35 ரூபாய்