LOADING...
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை
இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2024
02:33 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளி, அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்த சமயத்தில் பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு மற்றும் பலகாரங்கள் முக்கியமானவை. தீபாவளிக்கு பலகாரங்களை வீட்டில் தயாரிக்க ஆரம்பித்து விட்டுள்ளனர். இதற்குத் தேவையான மளிகை பொருட்கள் வாங்க முடியாதவர்கள் கடைகளில் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வாங்கி பலகாரம் செய்ய சிரமமாக இருப்பதால், தமிழக அரசு குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது.

அமுதம் பிளஸ்

நியாய விலைக்கடையில் விற்கப்படும் மாளிகைப்பொருட்கள் தொகுப்பு

தீபாவளியை ஒட்டி நியாய விலைக்கடையில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு, தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொகுப்பில் உள்ள மளிகை பொருட்கள் இதோ: கடுகு-125 கிராம் உளுத்தம் பருப்பு-500 கிராம் சீரகம்-100 கிராம் வெந்தயம்-100 கிராம் சோம்பு-50 கிராம் மிளகு-50 கிராம் மிளகாய்-250 கிராம் தனியா-500 கிராம் மஞ்சள் தூள்-50 கிராம் புளி-500 கிராம் உப்பு-1 கிலோ கடலை பருப்பு - 200 கிராம் பாசிப்பருப்பு - 200 கிராம் வறுகடலை - 200 கிராம் பெருங்காயத்தூள் - 15 கிராம்

embed

Twitter Post

#WATCH | "இதே மளிகைப்பொருளை மற்ற கடையில வாங்குனா ₹800 வரும்.. ஆனா இப்போ ₹500க்கு கிடைக்குறது எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கு" - அமுதம் மக்கள் அங்காடியில் ₹499க்கு 15 மளிகைப் பொருட்களை வாங்கிய பொதுமக்கள் கருத்து #SunNews | #TNGovt | #RationShop | #Chennai pic.twitter.com/i6Qlbk1hBv— Sun News (@sunnewstamil) October 22, 2024 #WATCH | "இதே மளிகைப்பொருளை மற்ற கடையில வாங்குனா ₹800 வரும்.. ஆனா இப்போ ₹500க்கு கிடைக்குறது எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கு" - அமுதம் மக்கள் அங்காடியில் ₹499க்கு 15 மளிகைப் பொருட்களை வாங்கிய பொதுமக்கள் கருத்து #SunNews | #TNGovt | #RationShop | #Chennai pic.twitter.com/i6Qlbk1hBv— Sun News (@sunnewstamil) October 22, 2024

Advertisement