வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை
மழைக்காலம் தொடங்கி விட்டாலே, காய்கறிகளின் விலை அதிகரிக்கும். குறிப்பாக வெங்காயத்தின் விலை. கடந்த சில மாதங்களுக்கு தக்காளியின் விலை விண்முட்டும் அளவிற்கு உயர்ந்த நிலையில், தமிழக அரசு, அதை கொள்முதல் விலையில் விற்க ஏற்பாடு செய்திருந்தது. தற்போது, அதேபோல வெங்காய விலையை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.80-ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-ரூ.130 வரை விற்கப்படுகிறது.