LOADING...
தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்
அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2025
08:11 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 3 ஏடிஜிபிக்கள் உட்பட 30 அதிகாரிகளுக்கு முக்கிய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக காவல்துறையின் மிக முக்கிய பொறுப்பான சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். IAS அதிகாரி சத்யபிரத சாகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பதவி உயர்வு

டிஜிபி அந்தஸ்துக்கு 3 அதிகாரிகள் உயர்வு

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபிக்களாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் (சட்டம்-ஒழுங்கு), சந்தீப் மிட்டல் (சைபர் கிரைம்) மற்றும் பால நாகதேவி (பொருளாதார குற்றப்பிரிவு) ஆகிய மூவரும் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தற்போது ஆயுதப்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். பால நாகதேவிக்கு கூடுதல் பொறுப்பாக சிவில் சப்ளை சிஐடி துறையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறைத்துறை ஏடிஜிபியாகவும், போதைப்பொருள் அமலாக்கப்பிரிவு CID ஏடிஜிபியாக இருந்த அமல்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி கமிஷ்னராக பிரேம் ஆனந்த் சின்ஹா, சிபிசிஐடி ஏடிஜிபியாக அன்பு-வும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement