
வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகள் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,"அரசுப் பள்ளிகளில் பயின்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்விச் செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல், இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும்." என்று தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளி மாணவர்களுக்கு அரசின் சலுகை
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுள் நுழையும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள்!
— M.K.Stalin (@mkstalin) August 2, 2024
சிறகுகள் விரிப்பது வானத்தை ஆள்வதற்கே… pic.twitter.com/EJwVgTORZK