தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இன்ப்ளுயன்ஸா தொற்று அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர்கள் போன்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்ப்ளுயன்ஸா தொற்று ஜனவரி மாதங்களில் கட்டுக்குள் வந்திருந்த போதிலும், பருவ நிலை மாற்றத்தால் இப்போது மேலும் அதிகரித்துள்ளது.
இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் பொதுவாக மழைக்காலங்களில் அதிகம் பரவும் ப்ளூ வைரஸ்களால் அதிகரிக்கின்றது.
இது இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
வழிகாட்டுதல்
அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இது இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் பொதுவாக மிதமானதாகவே இருக்கும்.
எனினும் சிலருக்கு அதன் தீவிரம் அதிகரிக்கலாம், அது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் அபாயத்திற்கு கொண்டுசெல்லலாம்.
எனவே, இந்த தொற்று ஏற்பட்டதாக சந்தேகம் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது முக்கியம்.
தடுப்பு
தடுப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள்
நோயின் தீவிரத்தைப் பார்த்து, 'ஓசல்டாமிவிர்' என்ற தடுப்பு மருந்து வழங்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் வைத்தல் அவசியம்.
பொதுவாக, கைகளைக் குறைந்தது 20 வினாடிகள் வரை சோப்புடன் கழுவ வேண்டும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், கண்கள், முகம், மூக்கை அடிக்கடி தொடாமல் இருப்பதும் முக்கியம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, இந்த தொற்றின் பரவலை குறைக்க உதவும்.