NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
    மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை

    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் முறைகேடு நடந்திருப்பதை தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டுபிடித்தது.

    இதேபோல், திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி மோசடி நடைபெற்றுள்ளது.

    இந்த மோசடிகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிப் பொருட்களை கூடுதலாக பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மோசடிகளை களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனை நடத்தியது.

    அதிகாரிகள் குழு

    ஐஏஎஸ் மட்டத்திலான அதிகாரிகள் தலைமையில் குழு

    இதுபோன்ற முறைகேடுகளை களையவும், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக, பள்ளிக் கல்வித்துறையில் ஐஏஎஸ் தரத்திலான அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

    இந்த அதிகாரிகள் அனைவரும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா என்பதை கவனிப்பதோடு, பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்வர்.

    மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், ஆய்வு செய்ததற்கான அறிக்கையை 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிக்கல்வித்துறை
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பள்ளிக்கல்வித்துறை

    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    பாடபுத்தகங்களில், 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற NCERT குழு பரிந்துரை  பள்ளி மாணவர்கள்
    பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2,222 காலியிடங்கள் - கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்க முடிவு தமிழ்நாடு
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  தேர்வு

    தமிழக அரசு

    சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம் மெரினா கடற்கரை
    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்
    தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது! தமிழ்நாடு
    புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம் புத்தக கண்காட்சி

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இனி அதிக ஹாரன் எழுப்பினால் ரெட் சிக்னல் மாறாது; சென்னையில் வருகிறது புது திட்டம் சென்னை
    பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள் விநாயகர் சதுர்த்தி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி
    ரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025