Loading...
தீபாவளிக்கு தமிழக அரசின் 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு': ₹100-க்கு 10 காய்கறிகள் விற்பனை
தீபாவளிக்கு தமிழக அரசின் 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு' நவம்பர் 5 தொடங்குகிறது

தீபாவளிக்கு தமிழக அரசின் 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு': ₹100-க்கு 10 காய்கறிகள் விற்பனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
12:45 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறந்தவெளிக் கடைகளில் காய்கறி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு 'வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், சமையலுக்கு தேவையான 10 வகையான அத்தியாவசியக் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வெறும் ₹100 சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. நுகர்வோருக்குச் சுமார் 2.5 கிலோவிற்கும் அதிகமான புதிய காய்கறிகள் தரம்பிரிக்கப்பட்டு பசுமை நெகிழி பையில் வழங்கப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

என்னென்ன கிடைக்கும்?

₹100 காய்கறித் தொகுப்பில் என்னென்ன கிடைக்கும்?

1. பெரிய வெங்காயம் - 500 கிராம்

2. தக்காளி - 500 கிராம்

3. கத்தரிக்காய் - 250 கிராம்

4. உருளைக்கிழங்கு - 250 கிராம்

5. கேரட் - 200 கிராம்

6. பீன்ஸ் - 200 கிராம்

7. பச்சை மிளகாய் - 100 கிராம்

8. எலுமிச்சை - 100 கிராம்

9. இஞ்சி - 50 கிராம்

10. தேங்காய் - 1 (400 முதல் 450 கிராம் எடை கொண்ட பெரிய தேங்காய்)

ADVERTISEMENT

விற்பனை மையங்கள்

விற்பனை நடைபெறும் நாட்கள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 நிலையங்களில் இத்தொகுப்பு கிடைக்கும்.

தலைநகர் சென்னையில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கருத்தில் கொண்டு 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் வீதிகள் தோறும் கொண்டு சென்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு விற்பனை நவம்பர் 5 (வியாழக்கிழமை) முதல் தொடங்கி, தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7 (சனிக்கிழமை) வரை நடைபெறும்.

ADVERTISEMENT

கட்டுப்பாடுகள்

அரசுக் கட்டுப்பாடுகள் & எச்சரிக்கை

கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களின்படி, தொகுப்பில் உள்ள காய்கறிகளின் எடையிலோ அல்லது எண்ணிக்கையிலோ எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

குறிப்பாக தேங்காய் 400 கிராமிற்கு மேல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அரசு நிர்ணயித்த ₹100 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT