
காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தராஜரனின் தந்தையுமான குமரி அனந்தன்.
இவர் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் திரு. குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு
#BREAKING | காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!#KumariAnanthan | #ThagaisalThamizar | #CMMKStalin | #KalaignarSeithigal pic.twitter.com/0BKHZzgX5c
— Kalaignar Seithigal (@Kalaignarnews) August 1, 2024