LOADING...
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை: அக்டோபர் 3 வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிப்பு!
அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை: அக்டோபர் 3 வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2025
03:11 pm

செய்தி முன்னோட்டம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4,5ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் வரும் அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது. அன்றும் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பேருந்துகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,190 சிறப்பு பேருந்துகள்

காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் எனத் தொடர்ந்து வரும் விடுமுறைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்குக் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் ஊர்கள்: திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு. அதோடு, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.