Page Loader
ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை
ஐஸ் பிஸ்கட் என்பது லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட்(Liquid Nitrogen Biscuit) ஆகும்

ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2024
03:08 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டது. அதில், பொருட்காட்சி ஒன்றில் சிறுவன் ஒருவன் அங்கே விற்பனை செய்யப்பட்ட ஐஸ் பிஸ்கட் (Ice Biscuit) ஒன்றை சாப்பிட்டபோது, அதீத குளிர்ச்சியின் காரணமாக சுவாசிக்க இயலாது அலறிய காட்சிகள் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. ஐஸ் பிஸ்கட் என்பது லிக்யூட் நைட்ரஜன் பிஸ்கட்(Liquid Nitrogen Biscuit) ஆகும். இந்த வீடியோ பதிவு வைரலானதை அடுத்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில் மேற்கூறிய நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றதை உறுதி செய்தனர். மேலும், இவ்வகை ஐஸ் பிஸ்கட் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.

அறிவிப்பு

எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஸ்மோக்கிங் பிஸ்கட் எனப்படும் லிக்குட் நைட்ரஜன் உயிருக்கு ஆபத்தானது. இதனை குழந்தைகள் சாப்பிட வேண்டாம். இதனால் தயாரிக்கப்படும் பிஸ்கட், மரணத்தையும் ஏற்படுத்தும். பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு இவ்வாறான பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம்". "திரவ வடிவிலான நைட்ரஜன் பயன்பாடு தேவையான இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். பொதுஇடங்களில் அதனை பயன்படுத்தி உணவுப்பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்யக்கூடாது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி உணவுப்பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்தால் ரூ.10 இலட்சம் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

embed

ஸ்மோக்கிங் பிஸ்கெட்

இது போன்று விற்கும் SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது LiquidNitrogen..தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் @Subramanian_ma pic.twitter.com/t6RRn1JuD6— Ozone Vasudevan Narayanan (@ozonemedimen) April 21, 2024