Page Loader
தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எழுதியவர் Nivetha P
Feb 07, 2023
04:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பாதிப்படைந்த டெல்டாமாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆய்வறிக்கையை அமைச்சர்கள் அவரிடம் சமர்ப்பித்த நிலையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் நிவாரண அறிக்கைகளை நேற்று(பிப்.,6) வெளியிட்டார். அதன்படி, பாதிப்படைந்த பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என பல குறிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செயலாளர் வரதராஜன், நிர்வாக குழு தங்கராஜ் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

வழங்க கோரிக்கை

முழு காப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35, 000

இதனைதொடர்ந்து, பருவம் தவறிய கனமழையால் சேதமடைந்த நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு முழு நிவாரணம் அளிக்கவேண்டும். அறுவடை காலத்தில் எதிர்பாரா மழையால் அழிவிற்கு உள்ளான சம்பா தாளடி நெற்பயிர்களுக்கு முழு காப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35, 000 வழங்கிட வேண்டும். உளுந்து, பயிர், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட தானியங்கள் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சீர்காழியில் விடுபட்ட 17 பஞ்சாயத்துக்கும் உடனடியாக இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் நடந்தது.