
கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல் பொருட்கள் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை மார்ச் 5ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிலையில் தற்போது கீழடியின் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் திருவண்ணாமலை கீழநலமண்டியில் அகழாய்வு பணிகளை வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன் படி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அவர் காணொளி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இந்த 9ம் கட்ட அகழாய்வு பணியானது கீழடி, அகரம், கொந்தகை என்னும் 3 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கீழடி அகழாய்வு பணிகளை துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
#JustIn | கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி ஏப்.6ல் தொடக்கம்!#SunNews | @mkstalin | @CMOTamilnadu | #Keezhadi pic.twitter.com/KQCKPkEjkk
— Sun News (@sunnewstamil) April 4, 2023