
'மும்பை வாக்': மும்பை தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றார்.
இரண்டு நாளாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், நேற்று எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று, INDIA கூட்டணியின் இலச்சினை(லோகோ) இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தனது தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சினை மேற்கொண்ட புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியானது.
முதல்வர் ஸ்டாலின், தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஒரு பேட்டியில், "மக்களும் தங்கள் உடல்நலனை பேணுவது முக்கியம்" என அவர் கூறியிருந்தார்.
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் எங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது தனது வழக்கம் எனவும் அவர் கூறியிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
மும்பை வாக்
Hon'ble Chief Minister @mkstalin had his morning walk in #Mumbai. pic.twitter.com/5kzMKkCBPb
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 1, 2023