NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்
    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அதில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 12ம் தேதி அவர்களது 2 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

    இது போன்று இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் இந்த ஒரு மாதத்தில் 3வது முறையாக நடந்துள்ளது.

    மீன் பிடி தொழிலினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மீனவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் அவர்கள் மனதில் அச்ச உணர்வினை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை கடற்படை தாக்குதல்

    உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்த முதல்வர்

    மேலும் அவர், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அவரும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக அரங்கேறி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து அவர் அந்த கடிதத்தில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும்,

    இனி இவ்வாறு நிகழாமல் இருக்கவும் நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

    சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், முன்னதாக சிறைபிடிக்கப்பட்ட 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    பிரதமர் மோடி
    இலங்கை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! மோடி
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025