நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
'நெக்ஸ்ட்' என்னும் மருத்துவத்துறை தகுதி தேர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், "மருத்துவத்துறையில் மாணவர்கள் சேர்க்கையில் ஏற்கனவே 'நீட்' தேர்வு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருக்கையில், தற்போது புதிதாக 'நெக்ஸ்ட்' என்னும் தகுதி தேர்வினை அறிமுகப்படுத்துவதால் கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்கள் பாதிப்படைவார்கள். அதே போல் தமிழக அரசின் கீழ் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களும் இந்த தேர்வினால் பாதிப்படைய நேரிடும். எனவே, 'நெக்ஸ்ட்' தகுதி தேர்வு முறையினை கைவிட்டு, தற்போதுள்ள முறையினையே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.