
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வரும் ஜூலை 22ம் தேதி காலை 10.30 மணியளவில் அமைச்சரவை கூட்டமானது நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள், தமிழக ஆளுநரின் போக்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறைகளின் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த ஒப்புதல்கள் குறித்து பேசப்படுவதோடு,
தமிழக பேரவையில் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட பிற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சரவை கூட்டம் குறித்த அறிவிப்பு
#BREAKING | வரும் 22ல் அமைச்சரவைக் கூட்டம்
— Thanthi TV (@ThanthiTV) July 19, 2023
வரும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு#TamilNadu | #DMK | #cmstalin pic.twitter.com/tvpbYDulW2