தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இது நிதி அமைச்சராக அவரது முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டில் வெளியான சில முக்கிய அறிவிப்புகள் இதோ: தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ரூ.120 கோடியில் அமைக்கப்படும் விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் மதுரையில் 25,000 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்
மாணவர்கள் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்காக ரூ. 2500 கோடி ஒதுக்கீடு 'நான் முதல்வன்' திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு 'தமிழ்ப்புதல்வன்' என்ற புதிய திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை சீரமைக்க அமைக்க ரூ. 26 கோடி ஒதுக்கீடு உயர்கல்வித்துறைக்கு, சென்ற ஆண்டை விட கூடுதலாக ரூ.1,245 கோடி ஒதுக்கீடு பள்ளிக்கல்விக்கு சென்ற ஆண்டை விட கூடுதலாக ரூ.3743 கோடி ஒதுக்கீடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு