LOADING...
100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் மு.க.ஸ்டாலின்

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
02:04 pm

செய்தி முன்னோட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை 'VB-G RAM G' என மாற்ற மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி 'MGNREGA பச்சாவ் சங்கிராம்' (100 நாள் வேலைத் திட்டத்தைக் காப்போம்) என்ற பெயரில் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதே போல தற்போது காங்கிரஸ் கூட்டணியிலுள்ள ஆளும் திமுக அரசின் தலைமையிலான மாநில அரசும் தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குற்றச்சாட்டுகள்

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளின் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தைச் சிதைப்பதாகத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்குத் தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 400 வழங்கப்பட வேண்டும் என்றும், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. மகாத்மா காந்தியின் பெயரையும், உழைப்பிற்கான கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்தத் திட்டம் அதன் பழைய பெயரிலேயே தொடர வேண்டும் என தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement