LOADING...
தமிழக தேர்தல் முடிவுகள் எப்போது? 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
மே 4ல் வாக்கு எண்ணிக்கை

தமிழக தேர்தல் முடிவுகள் எப்போது? 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 27, 2026
06:54 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் இந்தப் பணிகள் நடைபெற உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்த நிலையில், முடிவுகளை அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை

வாக்குகள் எண்ணும் பணி காலை சரியாக 8:00 மணிக்குத் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதனைத் தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மின்னணு இயந்திர வாக்குகளின் கடைசி சுற்றைக் கணக்கிடும் முன், தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இதற்கெனத் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள் குறித்த முக்கியத் தகவல்கள்

தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.36 லட்சம் பணியாளர்கள் தபால் வாக்குகள் மூலமாகவும், 1.10 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிச் சான்றிதழ் பெற்றும் வாக்களித்துள்ளனர். மேலும், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1.73 லட்சம் பேர் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதுவரை சுமார் 18,000 சேவை வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Advertisement

பாதுகாப்பு

பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கான எண்ணிக்கைப் பணிகள் தனித்தனிப் பகுதிகளில் நடைபெறும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வெளிப்படையான முறையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

Advertisement