தொகுதி மறுவரையறை & மேகதாது விவகாரம்: பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்
செய்தி முன்னோட்டம்
தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த வார தொடக்கத்தில், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக, விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் போராட்டம் நடத்திய உதயநிதி, நடிகை திரிஷா குறித்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அன்றிரவே அவர் காவல்நிலைய பிடியில் விடுவிக்கப்பட்டதும், இந்த தருணத்திற்காக தமிழகமே காத்திருந்தது. எதிர்பார்த்த வகையில், இன்று முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி மறுவரையறை மசோதா
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு
மத்திய அரசு பெண்கள் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதோடு இணைத்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர முயலும் நிலையில், திமுக தனது ஆரம்பக்கட்ட நிலையிலிருந்து மாறாமல் தொடர்ந்து அதை எதிர்த்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்தினார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பதிலாக 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பையே அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாக கொள்ள வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கையாகும்.
விஜய் உரை
மேகதாது அணை குறித்து பேரவையில் முதலமைச்சர் விஜய் உரை
பேரவையில் மேகதாது குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் அரசு அரசியலுக்காக செயல்படவில்லை என்றும், தமிழ்நாட்டின் உரிமைகளை சட்டப்படி பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த பெங்களூரு செல்ல முதலில் முடிவெடுத்தது தாம் தான் என்று கூறிய முதலமைச்சர், "பகை நாடுகளே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முற்படும்போது, பக்கத்து மாநிலத்திடம் பேசி தீர்வு காண நினைக்கக் கூடாதா? இந்த முயற்சியில் ஏதேனும் அவமானம் நடந்தால், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
மேலும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
. @TVKVijayHQ : எனது மக்களுக்காக எந்த அவமானத்தையும் சந்திக்க தயார் ! 🥺 pic.twitter.com/mJrrFqAoei
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 7, 2026
விவாதம்
விவசாயிகள் நலன் மற்றும் நிவாரணம் குறித்த விவாதம்
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், மேகதாது விவகாரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஒத்திவைப்புத் தீர்மானம் கோரினார்.
காவிரியில் உரிய தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எப்போது நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதையும், முழுப் பயிர்க் கடன் தள்ளுபடி வாக்குறுதியின் தற்போதைய நிலையையும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, காவிரி மற்றும் நீர்வளத் துறை சார்ந்த முழுமையான தகவல்களை நீர்வளத் துறை அமைச்சர் அவையில் விரிவாக அளிப்பார் என்று தெரிவித்தது.