Page Loader
தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு
தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு

தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு

எழுதியவர் Nivetha P
Apr 06, 2023
02:25 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு இன்று(ஏப்ரல்.,6) இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் 11 பேரினை இலங்கை ஊர்க்காவல்துறை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக கூறி உத்தரவிட்டது. மேலும் எஞ்சிய ஒருவருக்கு மட்டும் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அரசுடையமை யாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு