திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நியமனம் செய்யப்பட்டார்.
அதேபோல் ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை
இடைக்கால அறிக்கை தாக்கல்
இந்நிலையில், தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா 2ம் கட்ட விசாரணையினை நடத்துகிறார்.
இதற்கிடையே பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்ற பிரிவு காவல்துறை 324, 326 மற்றும் 506-1 உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.
இதனிடையே அமுதா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், வழக்கின் விசாரணையினை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் டிஜிபி சைலேந்திர பாபு அவர்களும் சிபிசிஐடி-க்கு விசாரணையினை மாற்றியமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மேலும் வரும் 5ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.