
பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்
செய்தி முன்னோட்டம்
பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஜங்சனில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான பயணிகள் ரயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையொட்டி செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இதன்படி, காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும், மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேவை வருகிற செப்.9-ம் தேதி முதல் அக்.3 வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.#Tiruchendur | #Tirunelveli | #Train | #SouthernRailway pic.twitter.com/JPDpAOCi7p
— விகடன் (@vikatan) September 6, 2024