
திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார்
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர்சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் இவர் சிறிய குற்றங்களுக்காக காவல்துறைக்கு விசாரணைசெய்ய அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துவருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
30க்கும் மேற்பட்டோர் இவரால் இப்படி தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வீர் சிங்'ஐ பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களில் மனித உரிமைமீறல் சம்பவங்களில் எவ்வித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன்மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது தேசிய மனிதஉரிமை மீறல் ஆணையத்தில் ஏ.எஸ்.பி.பல்வீர் சிங்'ற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
திருநெல்வேலியில் பற்களைப்பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார்
#BREAKING || ASP பற்களை பிடுங்கிய விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார்#asp | #police | #nellai | #thanthitv https://t.co/wPQ1IivlOe
— Thanthi TV (@ThanthiTV) March 31, 2023