திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் இவர் சிறிய குற்றங்களுக்காக காவல்துறைக்கு விசாரணை செய்ய அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
30க்கும் மேற்பட்டோர் இவரால் இப்படி தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவ்வாறு தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தமிழக முதல்வர்
சப்-கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொண்ட விசாரணை
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் மற்றும் முகமது சபீர் ஆலத்துக்கு அம்மாவட்ட ஆட்சியர் க.பா.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே பல்வீர்சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு உடனே மாற்றப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில் இன்று(மார்ச்.,29)கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் சப்-கலெக்டர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்கள்.
இவர்கள் 10பேரும் சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள் ஆவர்.
தொடர்ந்து அந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வீர் சிங்'ஐ பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல்நிலையங்களில் மனிதஉரிமை மீறல் சம்பவங்களில் எவ்வித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.