NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார் 
    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார்

    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார் 

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

    இக்கோயிலுக்கு வெளிமாவட்டம், மாநிலம் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகைத்தந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    உலகத்திலேயே பணக்கார தெய்வமாக கருதப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நகை, பணம் உள்ளிட்டவற்றினை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    அத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் சாதாரண நாட்களிலேயே அதிகளவு கூட்டம் இருக்கும் நிலையில், விடுமுறை தினங்கள், புரட்டாசி மாதம் போன்ற திருவிழா நாட்களின்போது பக்தர்கள் கூட்டம் பெருமளவு அதிகரிக்கிறது.

    இதனிடையே திருப்பதியில் உள்ளது போலவே இந்தியாவின் மற்ற இடங்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலினை கட்டலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவுச்செய்தது.

    இதன்படி தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே ஏழுமலையான் கோயில் கட்டிமுடித்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி 

    62 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில்

    இதனை தொடர்ந்து, அடுத்ததாக காஷ்மீரில் கோயிலினை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது என்று கூறப்படுகிறது.

    அதன்படி அங்கு கோயில் அமைக்க 7 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 4 இடங்களை தேவஸ்தான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் குறிப்பிட்ட இடத்தினை தேர்வு செய்த அதிகாரிகள், உரிய அனுமதிகள் அனைத்தையும் பெற்றுள்ளனர்.

    அதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வந்தது.

    ஜம்மு&காஷ்மீர் சித்ரா என்னும் பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இக்கோயிலினை இன்று(ஜூன்.,8) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    ஜம்மு காஷ்மீர்
    ஆந்திரா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் பாரத் ஜோடோ யாத்ரா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025