Page Loader
கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம்
தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி திருப்பும் வழியில் நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளது

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2024
08:03 am

செய்தி முன்னோட்டம்

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் உயிரழந்துள்ளார். மணிமாறனும் அவருடைய மகன் ரமேஷ் குமாரும், தினபூமி நாளிதழின் முதன்மை செய்தி ஆசிரியர் இல்ல நிகழ்விற்கு சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்த கார், எதிர்புறம் வந்த வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் வாகனத்தை ஒட்டி வந்த அவருடைய மகன் ரமேஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிமாறன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post