Page Loader
தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு
தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு

எழுதியவர் Nivetha P
Feb 22, 2023
04:34 pm

செய்தி முன்னோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி-மங்கம்மாள் தம்பதிக்கு தென் ஆப்ரிக்காவில் 1898ம்ஆண்டு பிப்ரவரி 22ம்தேதி பிறந்தவர் தில்லையாடி வள்ளியம்மாள். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரால் விதிக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து 1913ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். அவரது சொற்பொழிவுகள் சிறுமியான வள்ளியம்மை மனதில் ஆழமாக பதிந்தது. காந்தியடிகள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டார். கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லும், அதுமட்டும் தான் பதிவு செய்யப்படும் என்னும் சட்டத்தை எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த மகளிர் சத்தியாகிரகப்படையினருக்கு வள்ளியம்மை தொண்டு செய்தார். தடையை மீறி போராட்டம் செய்ததற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை கட்ட மறுத்து, 3மாத சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டார். தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை பெற வாய்ப்பிருந்தும் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

வள்ளியம்மை ஓர் தமிழ் பெண்

தனது 16வது வயதிலேயே இந்தியாவிற்காக போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலை போராளி'

இதனையடுத்து சுகாதாரமற்ற சூழல், அதிகமான சிறைபணியால் வள்ளியம்மை உடல்நலன் மிகவும் பாதிப்படைந்தது. சிறையில் இருந்து விடுதலையான 10 நாட்களில் 1914 பிப்ரவரி 22ம் தேதியான தனது பிறந்தநாளன்றே மறைந்தார். இதுகுறித்து காந்தியடிகள் இந்தியாவின் ஓர் புனித மகளை இழந்துவிட்டோம், ஏன் எதற்கு என்று தெரியாமலேயே தனது கடமையை செய்தவர் இவர். மனோபலம், தன்மானம் கொண்ட வள்ளியம்மையின் தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலன் தரும் என்று இரங்கல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து, தில்லையாடியில் இவரது நினைவு மண்டபம் உள்ளது, மேலும் ஓர் நூலகமும் செயல்பட்டு வருகிறது. தனது 16வது வயதிலேயே இந்தியாவிற்காக போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலை போராளி' வள்ளியம்மை ஓர் தமிழ் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.