செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு
செந்தில் பாலாஜியின் வழக்கை இன்று(ஜூலை 14) விசாரித்த மூன்றாவது நீதிபதி, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 14ஆம் தேதி பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. இதை எதிர்த்து, அவரது மனைவி எஸ் மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை நிஷா பானு மற்றம் பரத சக்கரவர்த்தி ஆகிய இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். ஆனால், இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த மனு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயனுக்கு மாற்றப்பட்டது.
காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு முழு அதிகாரமும் உள்ளது
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சிவகார்க்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த மனு குறித்து வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில்-சிபல், "அமலாக்கத்துறை காவல்துறை அல்ல. அவர்களால் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் ஒருவரை காவலில் எடுக்க முடியாது" என்று வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில்-சிபல் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டார். அமலாக்கத்துறை சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தவுடன் தீர்ப்பளித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன்,"காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு முழு அதிகாரமும் உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.