Page Loader
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது நீல நிற தலைப்பாகையின் ரகசியமும்!
கேம்பிரிட்ஜில் படித்த காலத்திலிருந்தே அவரது நீல நிற தலைப்பாகைக்காக அறியப்பட்டவர்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது நீல நிற தலைப்பாகையின் ரகசியமும்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 27, 2024
02:58 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு, தனது 92 வயதில் காலமானார் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங். இவர், கேம்பிரிட்ஜில் படித்த காலத்திலிருந்தே அவரது நீல நிற தலைப்பாகைக்காக அறியப்பட்டவர். அன்று முதல், அவர் கடைசியாக பொதுவெளியில் தோன்றியது வரை, நவீன இந்தியாவின் பொருளாதாரத்தின் சிற்பியாகக் கருதப்படும் மன்மோகன் சிங், பெரும்பாலும் நீல நிறத் தலைப்பாகையில் தான் காணப்பட்டார். அவர் எதற்காக குறிப்பாக இந்த நிறத்தை பயன்படுத்தினார் தெரியுமா?

ரகசியம் 

நீலநிற தலைப்பாகையின் ரகசியத்தை அவரே கூறினார்

முன்னாள் பிரதமர் ஒரு உரையின் போது, ​​தனது தலைப்பாகையின் நிறத்தின் பின்னணியில் உள்ள ரகசியத்தை வெளிப்படுத்தினார். இளவரசர் பிலிப் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் அவர் மன்மோகன் சிங்கின் தனித்துவமான நீல நிற தலைப்பாகையை சுட்டிக்காட்டி, அதை குறித்து கேட்டபோது, மன்மோகன் சிங் அதற்கான காரணத்தை கூறினார். நீல நிற தலைப்பாகையானது தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நினைவாக அணிந்திருப்பதாக அப்போது அவர் கூறினார். வெளிர் நீலம் தனக்கு மிகவும் பிடித்த நிறங்களில் ஒன்று என்றும், அது கேம்பிரிட்ஜில் அவர் மறக்க முடியாத நாட்களை நினைவூட்டுவதாகவும் விளக்கினார். அவர் கேம்பிரிட்ஜில் இருந்த காலத்தில், அவரது சகாக்கள் அவரை "blue turban" என்று அன்புடன் செல்லப்பெயர் சூட்டினர் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.