Page Loader
விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை
இவர் 12ஆம் வகுப்பு தேர்வில் 598/600 மதிப்பெண் எடுத்து, பள்ளியிலேயே முதலிடம் பிடித்திருந்தார்.

விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை

எழுதியவர் Sindhuja SM
Jun 28, 2023
09:17 am

செய்தி முன்னோட்டம்

12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த மாணவி அமுதாவின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வந்துள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் அரசுப்பள்ளி மாணவி அமுதா. இவர் 12ஆம் வகுப்பு தேர்வில் 598/600 மதிப்பெண் எடுத்து, பள்ளியிலேயே முதலிடம் பிடித்திருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக, இவரது தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் கடந்த ஜூன்-6ஆம் தேதி நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாணவி அமுதாவின் மேற்படிப்பிற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்றிருக்கும் அரசாங்கம் தற்போது மாணவி அமுதாவின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மாணவி அமுதாவுக்கு உதவ பள்ளிக்கல்வித்துறை முன்வந்தது