மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூடுகளால் ஒரு ராணுவ அதிகாரி பலத்த காயம் அடைந்ததை அடுத்து, மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் மீண்டும் பயங்கரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும், பயங்கரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகிய தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தான் கடந்த வாரம் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கூறப்படுகிறது.
ட்ஜகிவ்ன்
மக்களோடு மக்களாக கலந்து வன்முறையை தூண்டும் பயங்கரவாதிகள்
கடந்த வாரம், மீரா பைபிஸ்(பெண்கள் கண்காணிப்பாளர்கள்) குழுவினரால் ஏற்பட்ட மோதலின் போது லெப்டினன்ட் கர்னல் ராமன் தியாகி காயமடைந்தார்.
அந்த குழுவினர் பழங்குடியினரை தாக்க முயன்றதாகவும், ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரால் அந்த குழு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, அந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
UNLF, PLA, காங்லேய் யாவோல் கன்பா லுப் (KYKL) மற்றும் மக்கள் புரட்சிகர கட்சி காங்க்லீபாக்(PREPAK) ஆகிய பயங்கரவாத குழுக்கள் மீண்டும் எழுச்சி அடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.