LOADING...
தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையினால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 02, 2026
12:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையினால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க அவ்வப்போது தடைகளும் விதிக்கப்படுகின்றன. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

வானிலை எச்சரிக்கை

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சுயாதீன வானிலை ஆய்வாளர் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்,"தென்காசியில் இரட்டை சதம் அடித்து வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்தது. இதேபோல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் (பொள்ளாச்சி பெல்ட்), நெல்லை ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்தது". "இன்றும் அந்தப் பகுதிகளில் சில மழை பெய்தாலும் நேற்றைய அளவுக்கு கனமழை இல்லை. NEM-ல் மிகையாக உள்ள சில மாவட்டங்களில் தென்காசியும் ஒன்று, இந்தப் போக்கு 2026 வரை தொடர்கிறது" என கணித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement