LOADING...
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு; இதுதான் காரணமா?
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு; இதுதான் காரணமா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2025
08:34 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள டீ கடைகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் டீ, காபி உள்ளிட்ட பல பானங்களின் விலை அதிகரிக்கிறது. சென்னையில் இயங்கி வரும் 1,000-க்கும் அதிகமான டீ கடைகள், மூன்று ஆண்டுகளுக்குப் பின் விலை மாற்றத்தை அறிவித்துள்ளன. இதன்படி, நேற்று வரை ரூ.12-க்கு விற்கப்பட்ட டீ, இன்று முதல் ரூ.3 அதிகரித்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, காபி விலை ரூ.5 உயர்ந்து, ரூ.20 ஆக உள்ளது. பார்சல் டீ, காபி விலைகளும் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளன. ராகி மால்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பானங்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் மற்றும் லெமன் டீ விலையில் எந்த மாற்றமும் இல்லை.

கருத்து

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்ட விளைவு

டீ கடையில் பானங்கள் விலை உயர்ந்த இதே நேரத்தில், பஜ்ஜி, சமோசா, போண்டா உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலை ரூ.3 அதிகரிக்கப்பட்டு, ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் குறித்து சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் சுந்தர்,"விலை நிர்ணயத்தை எங்கள் சங்கம் மேற்கொள்வதில்லை. ஒவ்வொரு கடை உரிமையாளரும் தங்கள் பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்கிறார்கள். விலை உயர்வுகள், அத்தியாவசிய பொருட்களின் செலவுகளைப் பொருத்தே அமைகின்றன," என குறிப்பிட்டார். "மின் கட்டணமும், கேஸ் விலையும், அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக நாங்கள் விலை உயர்த்த வேண்டிய நிலை உருவானது," என்று தெரிவித்தார்.