
கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கேஸினை ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து நேர்ந்தது.
அப்போது லாரியில் இருந்து வெண்மை நிற வாயு வெளியேறுவதை கண்டு மக்கள் பதற்றம் அடைந்தனர்.
இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
மேலும் அப்பகுதியிலிருந்து டேங்கர் லாரி நகரும் வரை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | எர்ணாகுளத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து
— Thanthi TV (@ThanthiTV) April 27, 2023
லாரியில் இருந்து வெண்மை நிற வாயு வெளியேறுவதை கண்ட மக்கள் பதற்றம்
நான்கு தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தினர்#Ernakulam… pic.twitter.com/BWqKIB8kGt