
ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம் அருகே வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.
இப்பகுதியில் இயங்கி வரும் மோகனம் கலாச்சார மையம் சார்பில் தற்போது பாரம்பரிய திருவிழா துவங்கியுள்ளது.
இந்த திருவிழாவினை புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஆரோவில் செயலர் ரவி ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றி துவக்கி வைத்தனர்.
இந்த திருவிழாவானது இரண்டு நாட்கள் நடைபெற கூடியது.
தமிழரை பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய கலைகள், தமிழர் விளையாட்டுக்கள், கலாச்சார முறைகள், வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவைகள் இந்த திருவிழாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது
ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா....!!https://t.co/vkiySJgOBc#Malaimurasu #MalaimurasuDistrict
— Malaimurasu TV (@MalaimurasuTv) April 1, 2023