
தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை: என்ன நடக்கிறது ட்விட்டரில்?
செய்தி முன்னோட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழகம்" "தமிழநாடு" குறித்து பேசியதை அடுத்து "#தமிழ்நாடு" என்னும் ஹாஷ்டேக் ட்விட்டரில் தற்போது இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து:
50 ஆண்டுகளாக திராவிட ஆட்சியில் மக்களை ஏமாற்றியுள்ளனர்.
எல்லோரும் ஒன்றாக பாரதம் என்று இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் தங்களை தாங்களே திராவிடர்கள் என்று அழைத்து கொள்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
பாரத்தின் ஒரு பகுதியே தமிழ்நாடு. இதை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைத்தால் தான் சரியாக இருக்கும். என்று கூறினார்.
டிவிட்டர்
கொதித்தெழும் ட்விட்டர் வாசிகள்!
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய இந்த கருத்துக்களுக்கு திமுக தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
திமுகவின் அதிகாரபூர்வ கணக்கு, எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் இதற்கான எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.
எம்பி டி.ஆர்.பாலு, கீ.வீரமணி ஆகிய திமுக தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது போக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், "தமிழ்நாடு" என்பதற்கு ஆதரவாக "தமிழ்நாடு வாழ்க" என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
திமுகவை தவிர, திராவிட கொள்கைகளுக்கு ஆதரவான இணையவாசிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், "#தமிழ்நாடு" என்னும் ஹாஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி வருகிறது.