Page Loader
Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2024
01:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அளவிலான ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் தமிழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'StartUp தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!' 'TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது' என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

card 2

அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார் முதல்வர் 

அந்த பதிவில் கூடவே, "தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த மாண்புமிகு அமைச்சர் தாமோ.அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்!" என பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிகளவு முதலீடுகளையும் தமிழ்நாடு இந்தாண்டு ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்