முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், அங்கு பல முக்கிய தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த பயணத்தின்போது, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டுவரும் வகையில், பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் ஜிடிபியை அடைவதை இலக்காக கொண்டுள்ள முதல்வர், முதலீடுகளை ஈர்க்க ஏற்கனவே ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.