பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
போர் சூழலில் சிக்கியுள்ள இஸ்ரேல், பாலஸ்தீனியத்தில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனியத்தின தீவிரவாத குழுவான ஹமாஸின் திடீர் ஏவுகணை தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் அரசு போரை அறிவித்தது. பாலஸ்தீனியத்தின் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகளும், இஸ்ரேலின் தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் போர் மூண்டுள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 மற்றும் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தமிழ்நாடு அரசை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் வாழும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.