LOADING...
சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்; தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்

சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்; தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2025
10:27 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். முன்னதாக, சென்னை தீவுத்திடலில் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பில் நடைபெற்ற 16வது ஆண்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் பேசிய அவர், தடுப்பூசி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இளம் பெண்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதியையும் வலியுறுத்தினார். அரசு விரைவில் தொடங்கவுள்ள இந்த இலவசத் தடுப்பூசித் திட்டம், இளம் பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு பெரும் படியாக அமையும்.

புற்றுநோய்

இளம் வயதில் புற்றுநோய் அபாயம் 

குறிப்பாக, இளம் வயதிலேயே புற்றுநோய் அபாயத்தை ஆரம்பத்திலேயே தடுத்து, எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ₹36 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வெளியிட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post