செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மத்தியப் பங்கு நிதி ஒதுக்கீடு மற்றும் சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்திற்கான மத்தியப் பங்கு நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த குறிப்பாணையை முதல்வர் சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் முதல்வர் டெல்லியில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு, செப்டம்பர் 14 அன்று தமிழகம் திரும்பிய முதல்வர் செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் விரைவில் நேரில் சந்திப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.