'ஏற்றமிகு 7 திட்டங்கள்' குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், 'ஏற்றமிகு 7 திட்டங்கள்' என்னும் பெயரில் நலத்திட்டங்களை அவர் இன்று(பிப்.,28) துவக்கிவைத்தார். இதன் துவக்கவிழா சென்னை அண்ணா நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம், திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500ஆக உயர்வு, முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம், பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கான பணிநியமன ஆணை, ரூ.1,136கோடியில் பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், சென்னை மாநகரப்பகுதிகளில் கழிவுநீர் அகற்றும்பணிகளை நவீனப்படுத்தி தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில்முனைவோராக ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான சிறப்புத்திட்டம் என 7புதிய திட்டங்களை துவக்கிவைத்துள்ளார்.