3 நாட்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடுகிறது சட்டசபை: சட்டம் ஒழுங்கு விவாதத்திற்கு இன்று முதல்வர் விஜய் பதிலுரை
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடும் நிலையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார். கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது தீவிர விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் விரிவான விளக்கமளித்து முக்கியமான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானியக் கோரிக்கை
வணிக வரி மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கைகள்
முதலமைச்சரின் பதிலுரையை தொடர்ந்து, வணிக வரித்துறை, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுத்துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.
இவ்விவாதங்களின் இறுதியில், துறை சார்ந்த அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ரஞ்சித்குமார் மற்றும் ராஜிவ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, தங்கள் துறைகள் தொடர்பான புதிய திட்டங்கள் மற்றும் மானியக் கோரிக்கை அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
காவல் துறை சார்ந்த விவாதத்திற்கு முதலமைச்சர் அளிக்கவிருக்கும் பதிலுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay @CMOTamilnadu @TVKVijayHQ
— Rajmohan (@imrajmohan) September 6, 2026