தமிழும் தமிழும் சந்திக்கும் போது...கட்சிக்கு அப்பாற்பட்ட அன்பே வெளிப்படும்..!
மக்களவைத் தேர்தல் 2024க்கான போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள நிலையில், தென் சென்னையில் இருந்து போட்டியிட உள்ள திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். மற்ற தொகுதிகளை போலல்லாமல், இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதைகளை பரிமாறிக்கொண்டு, கட்டியணைத்துக்கொண்டு தேர்தலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தென்சென்னையில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனும், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். மாநிலத்தில் திமுக மற்றும் பாஜக இடையேயான கசப்பான அரசியல் சண்டைக்கு மத்தியிலும் இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
தமிழும் தமிழும் சந்திக்கும் போது!
வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட தமிழச்சி தங்க பாண்டியன், தமிழிசை சௌந்தரராஜன்!#ThamizhachiThangapandian | #TamilisaiSoundararajan | #BJP | #DMK | #LokSabhaElections2024 | #ElectionsWithIBCTamil pic.twitter.com/vKXPpSiWWM— IBC Tamil (@ibctamilmedia) March 25, 2024